என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தாய் தூக்குபோட்டு தற்கொலை
நீங்கள் தேடியது "தாய் தூக்குபோட்டு தற்கொலை"
திருச்சி அருகே மகன் தனிக்குடித்தனம் சென்றதால் மனவேதனை அடைந்த தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறி அலகாப்பட்டி கீழப்பள்ளம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 46). இவரது மனைவி மலர்கொடி(41). இவர்களது மகன் சிவா(25).
இந்நிலையில் சிவாவிற்கு கடந்த 6 மாதத்திற்க்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் சிவா தனது மனைவியுடன் தனி குடித்தனம் சென்று விட்டார்.
இதனால் மனவேதனை அடைந்த மலர்கொடி மகன் சிவாவிடம் நாம் அனைவரும் ஒன்றாக வாழலாம் என்று கூறினார். ஆனால் அதற்கு சிவா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மலர்கொடி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மலர்கொடி பரிதாபமாக இறந்தார். இது குறித்து முசிறி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×

X